நடிகைகளும், ஈகோவும்...!  இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால் ஒன்று வளவளன்னு பேச்சிருக்கும். அல்லது, உம்முன்னு ஒரு மௌனம் இருக்கும். நாம் பார்த்தது அந்த இரண்டாவது காட்சியை! மலையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிலிம்சேம்பரில் நடந்தது. ஹீரோயின் ஷம்முவை மேடைக்கு அழைத்தார்கள். கரணுடன் அடுத்த படத்தில் ஜோடி சேரப்போகும் அஞ்சலியையும் அழைத்தார்கள். புத்திசாலி தொகுப்பாளர். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் வாசித்தார். (இல்லையென்றால் அது தனி மனஸ்தாபத்தை உருவாக்கியிருக்கும் போல) பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் இருவரும். கீரியையும் பாம்பையும் ஒரு பெட்டியில் அடைத்த மாதிரி ஒரே கடுகடுப்பு அஞ்சலியிடம். நல்லவேளை, பக்கத்தில் திரும்பி பேசாவிட்டாலும் முகத்தில் கொஞ்சம் சந்தோஷமிருந்தது ஷம்முவிடம். நடிகைகளே, பலர் பார்க்கும் மேடையிது. ஜெயிக்கவே இல்லை. அதற்குள் ஈகோவா? |
No comments:
Post a Comment